கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 5-ம் தேதி, கோல கினபாத்தாதாங்கன் கடற்பகுதியில் கடத்தப்பட்ட இரு இந்தோனிசியப் பிரஜைகளை விடுவிக்க நேற்று திங்கட்கிழமை மலேசியாவும், இந்தோனிசியாவும் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளன.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அம்மான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனிசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்னோ எல்.பி.மர்சூதி நம்முடன் இணைந்து பணியாற்றி, பிலிப்பைன்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.