Home Featured உலகம் ஒரே மேடையில் ஹிலாரி, ஒபாமா தம்பதிகள் இறுதிக் கட்ட பிரச்சாரம்

ஒரே மேடையில் ஹிலாரி, ஒபாமா தம்பதிகள் இறுதிக் கட்ட பிரச்சாரம்

688
0
SHARE
Ad

hilary-clinton

பிலடெல்பியா – அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முதல் நாள் இரவு பென்சில்வேனியா மாநிலத்தின் தலைநகரான பிலடெல்பியா நகரில், இறுதிக் கட்டமாக நடைபெற்ற ஒரு மாபெரும் பிரச்சாரக் கூட்டடத்தில்  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தம்பதிகளுடன் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.

நெகிழ்ச்சியுடன் கூடிய உரையை ஆற்றிய ஒபாமாவின் மனைவி மிச்சல், அதிபரின் மனைவியாக தனக்கு இது மறக்க முடியாத நாள் என்றும் மற்றொரு வரலாற்றை உருவாக்கப்போகும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக இந்த மேடையில் நிற்கின்றேன் என்றும் உருக்கத்துடன் கூறினார்.

#TamilSchoolmychoice

ஹிலாரிக்காக பிரச்சாரம் செய்த  ஒபாமா, எல்லா வகையில் அதிபருக்கான தகுதிகளைப் பெற்றவர் ஹிலாரி என மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் தேர்தலுக்கு முதல் நாள், கருத்துக் கணிப்புகள் தனக்கு எதிராக இருந்தாலும், ஐந்து மாநிலங்களில் சூறாவளிப் பிரச்சாரங்களை மேற்கொண்டார் டொனால்ட் டிரம்ப்.