Home Featured நாடு கனத்த இதயத்துடன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மகாதீர்!

கனத்த இதயத்துடன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மகாதீர்!

697
0
SHARE
Ad
Tun Mahathir

கோலாலம்பூர் – எதிர்கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ள நாடாளுமன்றம் சென்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட், அது குறித்துத் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“நான் இங்கு சில சமூக நல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன் (2003 ஓய்வுக்குப் பிறகு), ஆனால் இந்த புதிய கட்டிடத்தைப் பார்வையிடுவது இதுவே முதல் முறை”

“இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அற்புதமான கட்டிடம். ஆனால் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. நான் சோகமாக இருக்கிறேன். இந்தக் கட்டிடம் பரவாயில்லை. ஆனால் இதன் உள்ளடக்கம் சரியில்லை” என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் மகாதீர் தெரிவித்துள்ளார்.