Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்களிப்பு தொடங்கியது!

அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்களிப்பு தொடங்கியது!

713
0
SHARE
Ad

Donald-Trump-Hillary-Clinton-

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் நேர வித்தியாசங்கள் பின்பற்றப்படுவதால், வாக்களிப்பு கட்டம் கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வாக்களிப்பு தொடங்கிய முதல் இடமாக டிக்ஸ்வில்லே நோட்ச் (Dixville Notch) என்ற இடம் விளங்குகின்றது. நியூ ஹெம்ப்ஷெயர் மாநிலத்திலுள்ள சிறிய ஊரான இங்கு திங்கட்கிழமை நள்ளிரவில் (செவ்வாய்க்கிழமை அதிகாலை) வாக்களிப்பு தொடங்கியது. இந்த ஊரில் 8 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்கள் வாக்களித்து முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஹிலாரி  4 வாக்குகள் பெற, டிரம்ப் 2 வாக்குகள் பெற்றார். எஞ்சிய இரண்டு வாக்குகளில் ஒன்று மற்றொரு வேட்பாளருக்கு செல்ல, மற்றொரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பல மாநிலங்களில் வாக்களிப்புகள் தொடங்கியுள்ளன.