Home Featured இந்தியா புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10 முதல் வெளியிடப்படும்!

புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10 முதல் வெளியிடப்படும்!

863
0
SHARE
Ad

new-500-200-rupee-note

புதுடில்லி – எதிர்வரும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் புதிய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலமாக வெளியிடப்படும் என இந்தியாவின் மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவித்த முக்கிய உரைக்குப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர், முக்கிய அதிகாரிகள் உடனடியாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கங்களை வழங்கினர்.

#TamilSchoolmychoice

2 நாட்களுக்கு முன்பே புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த புதிய நோட்டுகள் ஆறு மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டாலும், நிதி அமைச்சும், இந்தியாவின் மத்திய வங்கியும் இதனை மிகவும் இரகசியமாக வைத்திருந்ததாகவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்றிரவு நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பே வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தாலும், இவை புதிய நோட்டுகள் எனத் தெரிவிக்கப்படாமல், இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றிருக்கும். 500 ரூபாய் புதிய நோட்டில் புதுடில்லியின் செங்கோட்டை படம் இடம் பெற்றுள்ளது.

1000 ரூபாய் நோட்டில் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் வண்ணம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.