வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
ஆகக் கடைசியான தகவல்களின்படி, 232 தேர்தல் வாக்குகளை டிரம்ப் வென்றுள்ள நிலையில் 209 தேர்தல் வாக்குகளைப் பெற்று ஹிலாரி பின் தங்கியுள்ளார்.
அமெரிக்க பங்குச் சந்தையான டௌ ஜோன்ஸ் 700 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது.
ஆசிய சந்தைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதற்கிடையில் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவின் நாணய மதிப்பும் பெருமளவில் சரிந்துள்ளது. மெக்சிகோவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக, தனது பிரச்சாரங்களில் டிரம்ப் அறிவித்திருந்தார்.