Home Featured வணிகம் மலேசியாவில் பணமாற்று மையங்கள் 500, 1000 ரூபாய் தாள்களை ஏற்காது – சங்கம் அறிவிப்பு!

மலேசியாவில் பணமாற்று மையங்கள் 500, 1000 ரூபாய் தாள்களை ஏற்காது – சங்கம் அறிவிப்பு!

569
0
SHARE
Ad

wheretoexchange-sabahbooking-2

கோலாலம்பூர் – மலேசியாவில் உரிமம் பெற்ற அனைத்து பணமாற்று மையங்களும் இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வாங்கவோ, விற்கவோ செய்யாது என மலேசிய பணச் சேவை வர்த்தகச் சங்கம் (Malaysian Association of Money Services Business) அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று வியாழக்கிழமை அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“ரூபாய் தாள்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால், உலக அளவில் பணமாற்றுச் சேவை மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன”

“குறிப்பிட்டு அந்த ரூபாய் தாள்களை வைத்திருப்பவர்கள் அல்லது இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்பவர்கள் இந்திய அரசாங்கத்தின் நிதியமைச்சு மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அதில் பொதுமக்கள் தங்களிடமுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை முறைப்படி எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பது விளக்கப்பட்டுள்ளது.” என்று  மலேசிய பணச் சேவை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேல் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் (03) 77225808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த அதிரடி முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.