Home Featured நாடு மின்னல் தாக்கி மலிண்டோ பணியாளர் காயம்!

மின்னல் தாக்கி மலிண்டோ பணியாளர் காயம்!

821
0
SHARE
Ad

lightning

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பலத்த மழையின் போது, சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மலிண்டோ ஏர் விமானப் பணியாளரை மின்னல் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

இது குறித்து மலிண்டோ ஏர் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள தகவலில், “பிற்பகல் 3 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கிய போது இச்சம்பவம் நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பணியாளர் சக்கர வண்டியை (trolley) தள்ளிக் கொண்டு செல்கையில் மின்னல் தாக்கிக் காயமடைந்துள்ளார். மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்” என்று சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.