Home Featured தொழில் நுட்பம் செல்லியல்: தோற்றப் பொலிவும் தொழில்நுட்ப மேம்பாடும்!

செல்லியல்: தோற்றப் பொலிவும் தொழில்நுட்ப மேம்பாடும்!

723
0
SHARE
Ad
Selliyal-App-Stores
கோலாலம்பூர் – கடந்த நான்காண்டுகளாக தமிழ்-ஆங்கில இருமொழி மின்னேடாக செல்லியல் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இணைய தளம் வழியாகவும் திறன்கருவிகளின் வழியாகவும் உடனுக்குடன் செய்திகளை வழங்கியும் வருகின்றது.
நான்கு ஆண்டுகளில் நுட்பவியல் கொண்டுவந்துள்ள மேம்பாடுகளும், உலகளாவிய செல்லியல் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், செல்லியலின் தற்போதைய கட்டமைப்பை கொஞ்சம் ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. அண்மைக் காலங்களில் அடிக்கடி ஏற்பட்டத் தடைகளுக்கும் இதுவே காரணம்.
இணைய தளம் செயலிழந்தபோதும், செய்தி அறிவிக்கைகள் வாராதிருந்தபோதும், எங்களுக்கு வந்து சேர்ந்த வாசகர்களின் அன்பு மொழிகள் எங்களை பன்மடங்கு உற்சாகப் படுத்தியுள்ளன.
செல்லியல் புதுப் பொலிவுடன் தங்கு தடையின்றி தொடர்ந்து வெளிவரவேண்டும்! நுட்பவியல் மேம்பாடுகளை நுணுக்கமாக கண்காணித்துக் கடைபிடிக்க வேண்டும் – என்ற எங்களின் கடப்பாடும், பொறுப்புணர்வும் இதனால் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
அதையே நாங்கள் இப்போது செயலில் செய்து வருகின்றோம்!
செல்லியல் தளத்தின் இடமாற்றமும், இடைமுகத்தின் புதுத்தோற்றமும் நவம்பர் இறுதிக்குள் நிறைவடைய, எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். புதுமனை புகுந்து, புதுப்பொலிவுடன் வரும்வரை உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பொறுத்தருளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
செல்லியலுக்கு நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!
– செல்லியல் குடும்பத்தினர்.