குவெட்டா – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு சுஃபி பள்ளி வாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாநிலத்தில் அண்மைய சில மாதங்களாக சன்னி மற்றும் ஷியா முஸ்லீம் பிரிவினரிடையே பிரிவினை வாத மோதல்கள் பெருகி வருகின்றன.
பலுசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவிலிருந்து தென் பகுதியில் 750 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும், சுஃபி மதகுரு ஷா நுரானி பள்ளி வாசலில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதியிலிருந்து 3 மணி நேர பயண தூரத்தில்தான் கராச்சி நகர் அமைந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.