Home 13வது பொதுத் தேர்தல் ஈஜோக் தொகுதியில் காலிட் போட்டி?

ஈஜோக் தொகுதியில் காலிட் போட்டி?

700
0
SHARE
Ad

kalidஈஜோக், மார்ச்20- சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி புசாராகிய, டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் ஈஜோக் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டுகளாக சரி செய்ய முடியாமல் கிடந்த நில பிரச்சனையை சரி செய்ததன் வழி அவருக்கு ஈஜோக் தொகுதியில்  சுலபமாக வெல்லும் வாய்ப்பு கூடுதாலாக உள்ளது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பி.கே.ஆர் ஒழுங்கு முறைகள் மற்றும் கொள்கைகளை கடைப்பிடிப்பதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கூட்டணிக்கு முக்கிய பங்கு உள்ளது.

#TamilSchoolmychoice

“நான்  சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்தாலும், வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பி.கே.ஆர் தலைமைத்துவத்திடம்தான் உள்ளது. என்னைப்  பொறுத்த வரையில் பதவி அல்லது  மக்கள் பிரதிநிதியாக இருப்பது மக்கள் கொடுத்த பரிசு அல்ல மக்களுக்கு சேவையாற்றுவது  ஒரு கடமையாகும்.” என்று காலிட் சொன்னார்.

பி.கே.ஆர் தலைமையில்  எந்த தொகுதியிலும் போட்டியிட  வைத்தாலும் தாம்  தயாராக உள்ளதாகவும் இதனால் புத்ரா ஜெயாவை வீழ்த்தும் அளவிற்கு மக்கள் கூட்டணியின் ஆட்சி வலுபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“இதற்கு காரணம் என்னவென்றால்  எதிர்வரும் 13ஆவது பொதுத்தேர்தலில், ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில், கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதே ஆகும். ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த லிம் கிட் சியாங்  தேர்தலில் வெற்றி பெற்று தேசிய முன்னணியை வீழ்த்துவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் கூறினார்.