Home Featured உலகம் டிரம்ப் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஷின்சோ அபே!

டிரம்ப் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஷின்சோ அபே!

901
0
SHARE
Ad

Japanese Prime Minister Shinzo Abe speaks during a news conference at prime minister's official residence in Tokyo, Japan, 24 December 2014 after forming new cabinet.

வாஷிங்டன் – அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் சந்திக்கப் போகும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே திகழ்வார்.

நாளை வியாழக்கிழமை அமெரிக்கா செல்லும் ஷின்சோ அபே தனது வருகையின் ஒரு பகுதியாக டொனால்ட் டிரம்பைச் சந்தித்து, அமெரிக்கா-ஜப்பானிய உறவுகள் குறித்தும், டிபிபிஏ வணிக ஒப்பந்தம் குறித்தும் அவரது கருத்துகளைக் கேட்டறிவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

“ஷின்சோ அபே-டிரம்ப் சந்திப்புக்கு காத்திருப்போம்” நஜிப்

najib-japan-meeting-biz-leaders

ஜப்பானுக்கு வருகை தந்துள்ள நஜிப் அங்குள்ள ஜப்பானிய வணிகர்களோடு சந்திப்பு நடத்தியபோது… (படம்: நன்றி – நஜிப் ரசாக் டுவிட்டர் பக்கம்)

இதற்கிடையில் ஜப்பானுக்கு வருகை தந்துள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக், இன்று புதன்கிழமை, ஜப்பானியப் பிரதமர் அபேயுடன் சந்திப்பு நடத்தினார்.

அபே-டிரம்ப் இருவருக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்புக்குப் பின்னர் டிபிபிஏ வணிக ஒப்பந்தம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.