Home Featured நாடு மரியா ஆதரவுக் கூட்டத்தில் மகாதீர் உரை!

மரியா ஆதரவுக் கூட்டத்தில் மகாதீர் உரை!

1048
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – தடுப்புக் காவலில் இருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவிற்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் நேற்று திங்கட்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மரியாவிற்கு ஆதரவாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்திற்கு எதிராகவும், மரியாவின் மகன்கள் அசுமின், அசிமான், அசெமி உட்பட சுமார் 400 பெர்சே ஆதரவாளர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

mariaஇரவு 8 மணியளவில் தொடங்கிய அந்நிகழ்வில், சுமார் 1 மணி நேரத்திற்குப் பின்னர் மகாதீரும், அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

மரியா மீதான கைது நடவடிக்கை குறித்தும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறித்தும் விமர்சித்த மகாதீர், பின்னர் இரவு 10 மணியளவில் தனது மனைவியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.