Home Featured உலகம் இந்தியாவிலிருந்து வந்த 5000 போலி அரிசி மூட்டைகள் – சிங்கப்பூரில் பறிமுதல்!

இந்தியாவிலிருந்து வந்த 5000 போலி அரிசி மூட்டைகள் – சிங்கப்பூரில் பறிமுதல்!

799
0
SHARE
Ad

fake-riceசிங்கப்பூர் – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  5000 மூட்டைகள் போலி அரிசிகளை பாசீர் பஞ்சாங் முனையத்தில் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

129 டன்கள் எடை கொண்ட அந்தப் போலி அரிசி மூட்டைகள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையுடன் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அதனைப் பறிமுதல் செய்துள்ள சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள், அதை இறக்குமதி செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice