Home Featured கலையுலகம் மலையாள நடிகர் திலீப் – காவ்யா மாதவன் திருமணம்!

மலையாள நடிகர் திலீப் – காவ்யா மாதவன் திருமணம்!

795
0
SHARE
Ad

dileep-and-kavya-madhavanகொச்சி – மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கு இன்று வெள்ளிக்கிழமை கொச்சியில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

இத்திருமணம் நடைபெறுவது குறித்து இருவரின் வீட்டாரும் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 1998-ம் ஆண்டு, நடிகை மஞ்சு வாரியாரைத் திருமணம் செய்த நடிகர் திலீப், கடந்த 2015-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதேபோல், நடிகை காவ்யா மாதவன் கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் நிஷால் சந்திராவைத் திருமணம் செய்து கடந்த 2011-ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.