Home Featured கலையுலகம் பாவனாவைக் கடத்த 4 வருடத் திட்டம் – திலீப் வாக்குமூலம்!

பாவனாவைக் கடத்த 4 வருடத் திட்டம் – திலீப் வாக்குமூலம்!

1612
0
SHARE
Ad

Bhavana-Kavya-Dileep-650x330கொச்சி – கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா கடத்தப்பட்டு ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பல்சர் சுனில் என்பவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப்பும், அவரது புதிய மனைவி காவ்யா மாதவனும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது.

அதற்கேற்ப, சிறையில் இருந்தபடி, பல்சுல் சுனில், பணம் கேட்டு நடிகர் திலீப்புக்குக் கடிதம் அனுப்பியதால், திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கத் தொடங்கின.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதி, திலீப் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், தனக்கும், சக நடிகையான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருந்ததை, 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மஞ்சு வாரியாரிடம் கூறிய காரணத்தினால், தனக்கும் பாவனாவுக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டது என்று தெரிவித்ததாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும், அப்போதே பல்சர் சுனில் என்பவனிடம் 50 லட்ச ரூபாய் கொடுத்து, பாவனாவை ஆபாசமாக வீடியோ எடுக்கும் படி கூறியதாகவும், பின்னர் அப்போது தொடங்கி பாவனாவைப் பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகவும் திலீப் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், பாவனாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நடைபெறப்போவதை அறிந்து அதனைக் கெடுக்கும் நோக்கில் அவரைக் கடத்தி ஆபாசமாகப் படமெடுக்க உத்தரவிட்டதாகவும் திலீப் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.