Home Slider பாவனா வழக்கு: சிறையில் திலீப்.. தலைமறைவாகிய காவ்யா!

பாவனா வழக்கு: சிறையில் திலீப்.. தலைமறைவாகிய காவ்யா!

1692
0
SHARE
Ad

dileep-and-kavya-madhavanகொச்சி – நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திலீபுக்கு 523-ம் எண் வழங்கப்பட்டிருக்கிறது. திலீப் அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் மேலும் 5 கைதிகள் உள்ளனர்.

திலீப்பின் ஜாமின் மனு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திலீப்பை நீக்குவதாக நேற்று அதன் தலைவர் நடிகர் மம்முட்டி அறிவித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவன், தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

அவர் கைது செய்யப்பட்டால், காவ்யா மாதவனும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படலாம்.