Home Slider மலையாள நடிகர் திலீப் கைது!

மலையாள நடிகர் திலீப் கைது!

1233
0
SHARE
Ad

dileep-and-kavya-madhavanகொச்சி – நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம், பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநரான பல்சர் சுனில் என்பவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாவனாவை காரோடு கடத்தி, ஓடும் காரில் வைத்து அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான்.

இந்நிலையில், பல்சர் சுனில் கைதான போதே, இச்சம்பவத்தின் பின்னணியில் நடிகர் திலீப்பும், அவரது புதிய மனைவியான காவ்யா மாதவனும் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும், திலீப் அதனை மறுத்து வந்தார். இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை, கேரள காவல்துறையால் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

தற்போது கேரள காவல்துறை திலீப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.