Home Slider புதிய எம்ஆர்டி சேவை சோதனை ஓட்டம் – நஜிப்,ரோஸ்மா பங்கேற்பு!

புதிய எம்ஆர்டி சேவை சோதனை ஓட்டம் – நஜிப்,ரோஸ்மா பங்கேற்பு!

1515
0
SHARE
Ad

Najibmrttrail12072017கோலாலம்பூர் – சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி சேவையின் சோதனை ஓட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சோதனை ஓட்டம் குறித்து ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றாலும் கூட நட்பு ஊடகங்களில் இந்தத் தகவல் பரவியிருக்கிறது.

நேற்று புதன்கிழமை பூசட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்திற்கு மாலை 6 மணியளவில் நஜிப் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

#TamilSchoolmychoice

அங்கிருந்து எம்ஆர்டி சேவை குறித்து அதிகாரிகள் சிறிய விளக்கம் அளித்த பின்னர், எம்ஆர்டி இரயிலில் நஜிப் பயணம் செய்தார்.