கோலாலம்பூர் – பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்றது.
இதற்கிடையில், மரியா சின் அப்துல்லாவைச் சந்தித்து சட்ட ஆலோசனைகளைப் பெற அவரது வழக்கறிஞரும் பெர்சே தலைவர்களில் ஒருவருமான அம்பிகா சீனிவாசன் முயன்று வருகின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மரியாவின் குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் அவரைச் சந்தித்த பின்னர் இதுவரை அவர்கள் மீண்டும் மரியாவைச் சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மரியாவிடமிருந்து வழக்கு தொடர்பான உத்தரவுகள் பெற வேண்டியிருப்பதால், அவரைச் சந்திக்க அனுமதிக்கும்படி காவல் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அம்பிகா தெரிவித்துள்ளார்.
காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காருக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில் அம்பிகா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.