Home Featured இந்தியா கோவளத்தில் ஜப்பான் சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்முறை!

கோவளத்தில் ஜப்பான் சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்முறை!

1057
0
SHARE
Ad

kovalam-beach-keralaதிருவனந்தபுரம் – கேரள மாநிலம் கோவளத்தில் சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அங்குள்ள வியாபாரி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

35 வயதான அப்பெண் தங்கும்விடுதி அறை ஒன்றில் இரத்தப் போக்குடன் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட தங்கும்விடுதி நிர்வாகிகள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அப்பெண்ணுக்கு உள்ளுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லையென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்த அப்பெண், கடந்த சனிக்கிழமை தான் கோவளம் கடற்கரை நகரத்தை அடைந்துள்ளார். அவர் கோவளத்திற்கு வந்து சில மணி நேரங்களில் இச்சம்பவம் அவருக்கு நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அப்பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நம்பப்படும் 25 வயதான வியாபாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே புதுடெல்லியிலுள்ள ஜப்பான் தூதரகத்திடம் இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.