Home Featured நாடு போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டோனி!

போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டோனி!

880
0
SHARE
Ad

tony-fernandezகோலாலம்பூர் – வரும் சனிக்கிழமை போப் பிரான்சிசை சந்திக்கவுள்ளதாக ஏர் ஆசியா தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஆண்டனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் வரும் சனிக்கிழமை போப் பிரான்சிசை சந்திக்கப் போகிறேன். அவரிடம் என்ன சொல்ல வேண்டும்? என்ன கேட்க வேண்டும்?” என்று டோனி பெர்னாண்டஸ் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

மேலும், “என்னுடைய வாழ்வில் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இது குறிப்பிடும்படியானது. அவருடைய திறந்த மனதை நிறைய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள டோனி, தான் இதற்கு முன்பு வாடிகன் நகருக்குச் சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், போப் பிரான்சிசை சந்திப்பதற்கான காரணம் என்னவென்பதை பெர்னாண்டஸ் குறிப்பிடவில்லை.