Home Featured இந்தியா பஞ்சாப் சிறையில் இருந்து தப்பித்த காலிஸ்தான் தலைவர் கைது!

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பித்த காலிஸ்தான் தலைவர் கைது!

765
0
SHARE
Ad

harmindersinghmintooபுதுடெல்லி – பஞ்சாப் நாபா சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் தப்பியோடிய மேலும் 5 பேரைப் பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில போலீஸ் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறைச்சாலையில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினர் போல் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் சிறை காவலர்கள் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்தில் ஏற்பட்ட பதற்றத்தைப் பயன்படுத்தி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ உள்பட ஆறுபேர் சிறையில் இருந்து தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.