Home Featured நாடு பினாங்கு துப்பாக்கிச் சூடு: சந்தேக நபருக்கு மனநல பாதிப்பு – ஐஜிபி தகவல்!

பினாங்கு துப்பாக்கிச் சூடு: சந்தேக நபருக்கு மனநல பாதிப்பு – ஐஜிபி தகவல்!

961
0
SHARE
Ad

penang-murderஜார்ஜ் டவுன் – கடந்த வியாழக்கிழமை இரவு பினாங்கில் துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையில், தனது முதலாளியையும், அவ்வழியே சென்ற இருவரையும் சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததை அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்தில் 32 வயதான டத்தோ கொல்லப்பட்டதோடு, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற பொதுமக்கள் இருவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலியாகினர்.

மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.