Home Featured நாடு இரட்டைக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி தூக்கில் தொங்கினார்!

இரட்டைக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி தூக்கில் தொங்கினார்!

724
0
SHARE
Ad

PDRM

ஜோகூர்பாரு – ஜோகூர் பாரு தென் பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலைகளின் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உலு சோ காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தனது சிறை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

20 வயதான அந்த சிறைக் கைதி மரணமடைந்துள்ளதை இஸ்கண்டார் புத்திரி வட்டாரக் காவல் துறைத் தலைவர் நூர் ஹாஷிம் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் தரையிலிருந்து 2.1 மீட்டர் உயரத்தில் அந்த சந்தேகக் கைதி, ஒரு துணியில் தூக்கிக் தொங்கக் காணப்பட்டதாகவும் நூர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அந்த துணி ஒரு சிறிய ஜன்னலோடு கட்டப்பட்டிருந்தது என்றும், அந்நபர் தூக்கில் தொங்கி ஐந்து மணி நேரங்கள் கழித்தே, சிறைக் காவலாளி அவரை அந்த நிலையில் கண்டார் என்றும் நூர் ஹாஷிம் கூறியுள்ளார்.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அந்த சந்தேகக் கைதி உடனடியாக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றும் காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறைக் காவலில் இருக்கும் கைதிகளின் மரணங்கள், மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்களையும், பொதுமக்களின் எதிர்ப்புகளையும் கிளப்பியிருக்கும் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு மரணம் சிறை தடுப்புக் காவலில் நிகழ்ந்திருக்கின்றது.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி எம்.மாரியாயி என்ற பெண்மணியும் அவரது சி.துர்கா தேவி என்ற 16 வயது மகளும், ஜோகூர், உலு திராமில் உள்ள தாமான் புத்திரி வாங்சா வீடமைப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கக் காணப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பில், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் மேலும் இன்னொரு நபரோடு குற்றம் சாட்டப்பட்டு, இஸ்கண்டார் புத்திரி காவல் நிலையத்தின் தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்தான் நேற்று தூக்கில் தொங்கக் காணப்பட்டவராவார்.