Home Featured நாடு ரோஸ்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

ரோஸ்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

800
0
SHARE
Ad

rosmahகோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக சீன பொருளாதார உச்சி மாநாட்டில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மான்சோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாலர் கல்விச் சேவையில் ரோஸ்மாவின் தலைமைத்துவப் பொறுப்பை கௌரவிக்கும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக சீன பொருளாதார உச்சி மாநாட்டின் தலைவரும், ஆசியான் வியூக மற்றும் தலைமைத்துவ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான டான்ஸ்ரீ மைக்கேல் இயோ அவ்விருதை ரோஸ்மாவிற்கு வழங்கினார்.

#TamilSchoolmychoice

விருதைப் பெற்றுக் கொண்ட ரோஸ்மா உரையாற்றுகையில், “எந்த தேசமாக இருந்தாலும் குழந்தைகள் தான் அதன் சொத்து. உலக அமைதிக்கான அடித்தளத்தை அவர்களிடம் தான் உருவாக்க முடியும். எனினும் வன்முறை, மோதல், போர் போன்றவைகளை குழந்தைகள் தெரிந்து கொள்ள நேர்ந்தால் நம்மால் உண்மையான அமைதியைப் பெற இயலாது. நாம் அவர்களுக்கு அமைதி,  கருணை, உயிரின் மதிப்பு ஆகியவற்றை கற்றுத் தரவில்லை என்றால், அவர்களுக்கு சிலர் வன்முறையையும், வெறுப்பையும் கற்றுத் தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.