Home Featured தமிழ் நாடு முதல்வருக்காகப் பிரார்த்தனை செய்வோம் – அப்போலோ அறிக்கை!

முதல்வருக்காகப் பிரார்த்தனை செய்வோம் – அப்போலோ அறிக்கை!

793
0
SHARE
Ad

jayalalithaசென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வருக்கு இதய நோய் நிபுணர்கள், அவசர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது. லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவின் ஆலோசனையின் படியும் அவருக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்” என்று அப்போலோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.