சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்)
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மோசமடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:
- மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு புதுடில்லியிருந்து சென்னைக்கு விரைந்துள்ளார்.
- தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
- ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருவதாக அதிமுகவின் மூத்த அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் கூறியுள்ளார்.
- தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக நிலவரம் குறித்தும், தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்தும் விளக்கியுள்ளார்.
- மத்திய சுகாதார இணை அமைச்சர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த இறுதி நிலவரங்களைத் தெரிவித்துள்ளார்.
- ஜெயலலிதா அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார் என்றும் மத்திய சுகாதார இணை அமைச்சர் ஜேபி நட்டா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
- 4 பேர் கொண்ட ஏய்ம்ஸ் மருத்துவர் குழு பிற்பகலில் சென்னை அப்போலோ மருத்துவமனை வந்தடையும்.