சென்னை – அனைத்து தரப்புகளும் மிகவும் எதிர்பார்த்திருந்தபடி, அப்போலோ மருத்துவமனையின் புதிய அறிக்கை தற்போது (மலேசிய நேரம் பிற்பகல் 3.20 அளவில்) வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி தமிழக முதல்வர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகின்றார் என்றும், அவருக்கு ECMO (Extracorporeal membrane oxygenation) எனப்படும் முறையிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் தொடர்ந்து கருவிகளின் மூலம் சுவாசித்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அப்போலோவின் மருத்துவ அறிக்கை
தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து விளக்கியுள்ள தமிழக தனியார் மருத்துவர் ஒருவர், இசிஎம்ஓ எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் மூலமாக வழங்கப்படும் சிகிச்சை பலனளிக்குமா என்பது குறித்து 24 மணி நேரம் கழித்தே கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.