Home Featured தமிழ் நாடு தங்கப் பேழையில் தமிழ் நாட்டுத் தங்க மகள் ஊர்வலம் தொடங்கியது

தங்கப் பேழையில் தமிழ் நாட்டுத் தங்க மகள் ஊர்வலம் தொடங்கியது

473
0
SHARE
Ad

jaya

சென்னை – (மலேசிய நேரம் 7.00 மணி நிலவரம்)  ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு பிரமுகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது நல்லுடல் இராணுவ வாகனத்தில் ஊர்வலமாக தற்போது மெரினா கடற்கரை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

சற்று முன்பு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் தங்களின் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் உடனடியாக ஜெயலலிதாவின் நல்லுடல் தங்க இழைகளைக் கொண்ட கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு, ஓர் இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

இன்று காலை முதல் தமிழகத் தொலைக்காட்சிகளில், ஜெயலலிதாவுடன் இளவயதில் நெருங்கிப் பழகிய பலரும் “அவர் அவ்வளவு அழகு! தங்கப்பதுமை போல இருப்பார்” என்று அவரது அழகுக்குப் புகழாரம் சூட்டியவண்ணம் இருந்தனர்.

ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றம் நடைபெற்ற போது அதற்குத் தலைமையேற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரை “தங்கச் சிலை” என வர்ணித்திருந்தார்.

அந்த புகழ் மொழிகளுக்கு ஏற்ப தங்கப்பேழையில் வைக்கப்பட்ட தமிழ் நாட்டுத் தங்க மகளின் நல்லுடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட, இலட்சக்கணக்கான மக்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.