கோலாலம்பூர் – போக்குவரத்து சம்மன்களை கழிவு விலையில் செலுத்த உதவி செய்கிறேன் என்று கூறும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்மன்களைச் செலுத்த அப்படிப்பட்ட இடைத்தரகர்கள் யாரும் இல்லை என்று தேசியக் காவல்படையின் துணைத் தலைவர் நூர் ரஷீத் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“சம்மன்களை அது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மட்டுமே செலுத்த முடியும்” என்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறைப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நூர் ரஷீத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அது போன்ற இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராகி வருவதாகவும் நூர் ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.