அலோர்ஸ்டார்: அண்மையில் கைது செய்யப்பட்ட ஒன்பது தீவிரவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் எனக் குறிப்பிட்ட காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரஷீட், இவ்வாறான தீவிரவாதிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக, புக்கிட் அமான் எந்நேரமும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.
மலேசிய உளவுத் துறை எந்தவொரு தீவிரவாத நடவடிக்கைகளும் இந்நாட்டில் நிகழாமல் இருப்பதற்காக தொடர்ந்து தகவல்களை திரட்டி வருவதாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்க்கொள்ள காவல் துறை எந்நேரமும் விழிப்பு நிலையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சரவாக்கில் ஒன்பது தீவிரவாதிகளை கைது செய்ததன் பின்னணியில் வெளிநாட்டு காவல் துறையினரின் ஒத்துழைப்பு உள்ளதை அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அனைத்துலக அளவில் பாதுகாப்புத் துறைகளோடு இணைந்து செயல்படுவதால் இவ்வாறான விவகாரங்களில் விரைந்து முடிவெடுக்க முடிகிறது என அவர் தெரிவித்தார்.