கோலாலம்பூர்: அதிகபடியான பொது சேவை ஊழியர்கள் சேவையில் இருந்தால், அரசாங்கத்தின் செலவினங்களை அதிகரிப்பதோடு, தேசிய மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தற்போது உள்ள 1.7 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடற்றதாக இருந்தால், எதிர்காலத்தில், அவர்களை நிருவகிப்பதற்கான செலவினமும், ஒவ்வொரு வருடமும் நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் பெரும்பகுதியை அவர்களுக்கு ஒதுக்கும் படியாக அமையும் என அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசாங்கம் பண பற்றாகுறையை எதிர் நோக்கும் நிலை உண்டாகும் என அவர் மேலும் கூறினார்.
ஊழியர்களின் செயல்திறனைப் பாதிக்காது, அவர்களின் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்காமல் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என அரசாங்கம் நம்புவதாக பிரதமர் கூறினார்.