Home இந்தியா புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை!

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை!

813
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குக் காரணமான ஜய்ஷ்முகமட் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், மூன்று பேரை பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலையில் சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பயங்கரவாதி அதில் அகமட்டுடன், முதாசீர் கான் தொடர்பில் இருந்ததை தேசியப் புலணாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவின் திரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என்ற இரகசிய தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தினர், துணை இராணுவப் படையினர், காஷ்மீர் காவல் துறையினர் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

#TamilSchoolmychoice

பாதுகாப்புப் படையினர் கிராமத்தைச் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.