Home நாடு அடுத்த காவல் துறைத் தலைவர், துணைத் தலைவர் விரைவில் முடிவு செய்யப்படும்!

அடுத்த காவல் துறைத் தலைவர், துணைத் தலைவர் விரைவில் முடிவு செய்யப்படும்!

962
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் மற்றும் காவல் துறை துணைத் தலைவர் நூர் ராஷிட் இப்ராகிம், விரைவில் ஓய்வுப் பெற இருப்பதால், அவர்களுக்குப் பதிலாக அந்த இடத்தில் அமர்த்தப்பட இருக்கும் அதிகாரிகள் குறித்து உள்துறை அமைச்சு பிரதமர் மகாதீர் முகமட்டிடம் கலந்தாலோசிக்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் வருகிற மே மாதம் பதவி ஓய்வுப் பெற உள்ள வேளையில், நூர் ராசிட் இப்ராகிம் வருகிற மார்ச் மாதம் ஓய்வுப் பெற இருக்கிறார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, முன்னாள் காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ காலிட் அபு பாகாருக்குப் பதிலாக டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் காவல் துறைத் தலைவர் பதவியை ஏற்றார்.