Home Featured உலகம் ஆச்சே நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வீடுகள்!

ஆச்சே நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வீடுகள்!

680
0
SHARE
Ad

Joko Widodo walikota Surakarta. (tarko sudiarno)ஜகார்த்தா – ஆச்சே பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று வெள்ளிக்கிழமைப் பார்வையிட்ட இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசாங்கம் உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.

கடந்த புதன்கிழமை இந்தோனிசியாவின் வடக்குப் பகுதியான ஆச்சேவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், பல வீடுகள் தரைமட்டமாகின.

அதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிப் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.