புதுடெல்லி – ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனத்தின் படி, இந்தியாவும், இந்தோனிசியாவும் நேற்று திங்கட்கிழமை தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டன.
அதோடு, இரு நாடுகளுக்கிடையில் கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தங்களது கடல் எல்லைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை எதிர்கொள்ளத் தயாராவதாகவும் ஆசியாவின் இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், இந்தோனிசியாவும் உறுதியளித்தன.
இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள இந்தோனிசியப் பிரதமர் ஜோகா விடோடோ, தலைநகர் புதுடெல்லியில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
கடல் எல்லைகளில் இருநாடுகளுக்கு இடையில் உள்ள சுதந்திரம் குறித்தும், தென் சீனக் கடலில் அடிக்கடி ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கும் அமைதி நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
படம்: பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர்