Home Featured உலகம் ஜஸ்டோவுக்கு அரச மன்னிப்பு – விரைவில் விடுதலை!

ஜஸ்டோவுக்கு அரச மன்னிப்பு – விரைவில் விடுதலை!

981
0
SHARE
Ad

Xavier Andre Justoபேங்காக் – நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோ உட்பட ஆயிரம் கைதிகளுக்கு, தாய்லாந்தின் புதிய அரசர், அரசர் மகா வஜிராலாங்கோர்ன் போதிந்திரதேவரங்குனின் அரச மன்னிப்பு வழங்கவுள்ளார்.

இது குறித்து ஜஸ்டோவின் வழக்கறிஞர் வோராசிட் பிரியாவிபூன் வெளியிட்டுள்ள தகவலில், “ஆமாம்.. அரசர் ராமா எக்ஸ் (மகா வஜிராலாங்கோர்ன்) இடமிருந்து ஜஸ்டோ அரச மன்னிப்பு பெறவுள்ளார். அண்மையில் அவர் பெற்ற அரச மன்னிப்பின் படி, அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் வாய்ப்பை அடைகின்றார், காரணம் அவருக்கு ஒரு வருடத்திற்குக் குறைவாகவே தண்டனைக் காலம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரச மன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அவர் விடுதலையாகலாம் என்றும் வோராசிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அவருக்கு அரச மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தை மிரட்டியதாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்த சுவிஸ் பிரஜையான ஜஸ்டோவுக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம், தாய்லாந்து அரசர் பூமிபோல் அடுல்யாடேஜ் 70 ஆண்டு ஆட்சி மற்றும் அரசிய சிரிகிட்டின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு, சிறைத் தண்டனை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.