Home Featured உலகம் 47 பயணிகள் பலி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்!

47 பயணிகள் பலி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்!

638
0
SHARE
Ad

pakistan-airlines-atr-42-model-planeஇஸ்லாமாபாத் – கடந்த வாரம் நடந்த பாகிஸ்தான் விமான விபத்தில் 47 பயணிகள் பலியானதையடுத்து, பாகிஸ்தான் அனைத்துலக விமான நிறுவனத்தின் தலைவர் அசாம் சேகல், பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், தான் பதவி விலகக் காரணம், ‘தனிப்பட்ட காரணம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சேகல் கூறுகையில், “விபத்திற்குள்ளான அந்த விமானத்தில் அனைத்தும் மிகச் சரியாக இருந்தது, அவ்விமானத்தை ஓட்டிய விமானி பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, கண்டிப்பாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறோ அல்லது மனிதத் தவறோ நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சேகல் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.