Home Featured நாடு ‘எம்ஆர்டி சேவை மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும்’ – நஜிப்

‘எம்ஆர்டி சேவை மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும்’ – நஜிப்

698
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – மக்களின் அன்றாட வாழ்வில் எம்ஆர்டி சேவை ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்று அவர்களது வாழ்க்கைச் சூழலை மாற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது வெறும் உட்கட்டமைப்புத் திட்டம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டுள்ள நஜிப், மக்களின் எண்ணைத்தை அறிந்து வடிவமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி சேவை அப்படி வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பல திட்டங்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் பலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி சேவை வரும் டிசம்பர் 16-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.