Home Featured நாடு 5,044 சட்டவிரோத வலைத்தளங்களை முடக்கியது எம்சிஎம்சி!

5,044 சட்டவிரோத வலைத்தளங்களை முடக்கியது எம்சிஎம்சி!

884
0
SHARE
Ad

SKMM-MCMC-2014கோலாலம்பூர் – கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் பல்வேறு குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 5,044 வலைத்தளங்களை மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி ) முடக்கியுள்ளது.

இது குறித்து எம்சிஎம்சி துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஜைலானி ஜோஹாரி கூறுகையில், அவற்றில் 4,277 ஆபாச வலைத்தளங்கள் என்றும், 767 சூதாட்டம், விபச்சாரம், மோசடி, திருட்டு, கள்ளச் சந்தைப் பொருட்கள், கள்ள மருந்துகள் மற்றும் இன்னும் பல சட்டவிரோத விவகாரங்களைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.