Home Featured நாடு மாமன்னர் சிறப்புடன் வழிநடத்த சுப்ரா வாழ்த்து!

மாமன்னர் சிறப்புடன் வழிநடத்த சுப்ரா வாழ்த்து!

774
0
SHARE
Ad

 

agong-kelantanfeature-sultanகோலாலம்பூர் – நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13 டிசம்பர் 2016), நாட்டின் 15-வது மாமன்னராகப் பதவி உறுதிமொழி எடுத்திருக்கும் கிளந்தான்  சுல்தான் முகமது V அவர்களுக்கு தனது பணிவான நல்வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Subramaniam-“நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையும் அணுக்கமான உறவையும் கொண்டிருக்கும் ஒருவர் மாமன்னராக அரியணையில் வீற்றிருப்பதைத் தொடர்ந்து, மலேசிய இந்தியர்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், நாட்டின் சுகாதார அமைச்சின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் மிகுந்த பெருமையடைகிறேன். மாமன்னர் அவர்களின் மிதவாதத் தன்மையும் நேர்மையும் பல இனம், சமயம் கடந்து வாழும் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் வலிமைக்கும் அடிக்கல்லாகும்” என்றும் சுப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அதன் அடிப்படையில், நாட்டின் அமைதியையும் வளத்தையும் தொடர்ந்து ஒரே குடையின் கீழ் பாதுகாத்து முழு இறையாண்மையுடனும் உறுதியுடனும், மாமன்னர் அவர்கள் அவ்வுயரிய அரியணையில் வீற்றிருக்க வாழ்த்துகிறேன்” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.