Home Featured உலகம் பாப்புவா நியூகினியில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

பாப்புவா நியூகினியில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

977
0
SHARE
Ad

papua-new-guinea-map

பாப்புவா நியூகினி – ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள பாப்புவா நியூகினி தீவை இன்று சனிக்கிழமை 7.9 புள்ளிகள் சக்தி கொண்ட நிலநடுக்கம் ஒன்று தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு சுனாமி அபாயம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாப்புவா நியூகினி மட்டுமல்லாது அருகிலுள்ள இந்தோனிசியா, சாலமன் தீவுகள், மற்றும் சுற்றியுள்ள தீவுப் பகுதிகளுக்கும் சுனாமி அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.