Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: கத்திச்சண்டை – காமெடி, கவர்ச்சியோடு கொஞ்சம் சமூகக் கருத்து!

திரைவிமர்சனம்: கத்திச்சண்டை – காமெடி, கவர்ச்சியோடு கொஞ்சம் சமூகக் கருத்து!

1219
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் சூரஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கத்திச்சண்டை. காதல், காமெடி, சண்டை காட்சிகள் அதோடு கொஞ்சம் சமூகக் கருத்தும் சொல்கிறது படம். மக்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் பணம் முறையாக அவர்களுக்குப் போய் சேராமல் அரசியல்வாதிகளின் கள்ளப் பணமாக மாறும் போது ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.

tamanna-hot-stills-in-kaththi-sandai-tamil-movie-2கதையைப் பொறுத்தவரையில், திடீர் திருப்பங்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்.. ஆனால் அதில் புதுமைகள் தான் இல்லை. ‘ஜென்டில்மேன்’ அர்ஜூன் பாணியில், அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து கறுப்புப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார் ஹீரோ விஷால்..எதற்காக கொள்ளையடிக்கிறார்? உண்மையில் விஷால் யார்? போலீசா? கைதியா? போன்ற பல முடிச்சுகளை முதல் பாதியில் வைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அதற்கான விடைகளை ஒரு 20 நிமிட பிளாஷ்பேக் காட்சிகளின் மூலம் கட்டவிழ்க்கிறார்கள்.

கதாநாயகியாக தமன்னா..நடிப்பதற்கான வேலை ரொம்ப குறைவு. கவர்ச்சி உடைகளில் மூன்று பாடல்களுக்கு வருகிறார் அவ்வளவு தான். அதன் பின்னர் கிளைமாக்சில் தான் வருகிறார்.

#TamilSchoolmychoice

kaththi-sandai-exclusive-stills-1முதல் பாதி காமெடிக் காட்சிகள் முழுவதும் சூரிக்கு.. இரண்டாம் பாதி முழுவதும் வடிவேலுவுக்கு என்று காமெடிக் காட்சிகளைப் பிரித்திருக்கிறார்கள். சூரியின் காமெடிக் காட்சிகளைப் பார்க்கையில் சின்ன வடிவேலுவைப் பார்த்தது போல் இருக்கிறது. வடிவேலுவின் அதே அடி வாங்கும் பாணி. ஆனால் அதில் சூரி தனது கைப்பக்குவத்தை கொஞ்சம் காட்டி கிளாப்ஸ் வாங்கிவிடுகிறார்.

vishal_tamanna_kathi_sandai_movie_stills_soori_vadivelu_5c34482இரண்டாம் பாதியில் மனநல மருத்துவராக பூத்ரி கதாப்பாத்திரத்தில், ‘நெருப்புடா’ பின்னணியுடன் களமிறங்குகிறார் வடிவேலு. வடிவேலுவை மீண்டும் திரையில் பார்த்தவுடன் கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளக்கிறது. அதன் பின்னர் ஒரு 10, 15 நிமிடங்கள் வடிவேலு என்னென்னவோ தனது பழைய டெக்னிக்கை எல்லாம் பயன்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைக்கப் பார்க்கிறார். ஆனால் சிரிப்பு வரவில்லை. அந்த மொட்டை பிச்சைக்காரன் துரத்தும் காட்சியில் மட்டும், வடிவேலு மீண்டும் தனது வருகையை நிரூபித்துவிட்டார். அந்தக் காட்சியில் திரையரங்கே தன்னை மறந்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

tamanna-hot-stills-in-kaththi-sandai-tamil-movie-3விஷால் கூறும் கிராமத்து பிளாஷ்பேக் சொல்லப்பட்ட விதமும், காட்சிப்படுத்தப்பட்ட விதமும் அருமை. அதற்காக படக்குழுவினரைப் பாராட்டலாம். அக்காட்சிகளில் விஷாலின் நடிப்பும், நடிகர் சௌந்தரராஜாவின் நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. அதோடு, சமூகம் சார்ந்த பல கருத்துக்களை அங்கு வைத்திருக்கிறார்கள். அக்காட்சிகள் ரிச்சர்டின் கேமராவில் தத்ரூபமாகப் பதிவாகியிருக்கிறது.

படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். சொல்ல வேண்டிய கருத்தை கடைசி ஒரு 20 நிமிடக் காட்சிகளில் வைத்துவிட்டு, முக்கால்வாசிப் படத்தை காமெடிக்கும், கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் காமெடி ஜவ்வாக இழுக்கிறது. அதிக இனிப்பும் சலித்துவிடும் என்பதை இயக்குநர் உணர்ந்திருக்கலாம்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் இரகம்..

மொத்தத்தில் கத்திச்சண்டை – காமெடி, கவர்ச்சியோடு கொஞ்சம் சமூகக் கருத்து! தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்..

-ஃபீனிக்ஸ்தாசன்