Home Featured தமிழ் நாடு ‘கணவரைக் காணவில்லை’ – சசிகலா புஷ்பா புகார்!

‘கணவரைக் காணவில்லை’ – சசிகலா புஷ்பா புகார்!

695
0
SHARE
Ad

sasikala-pushpaசென்னை – இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தனது கணவரைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளிக்கப்பட்டது.

அதில் விருப்ப மனு அளிக்க வந்த சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது கணவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.