வாஷிங்டன் – நேற்று புதன்கிழமை முதல் டுவிட்டர் தளம், தனது பயனர்களுக்கு 360 பாகை காணொளி தொடரலை (Streaming) வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் டுவிட்டர் பயனர்கள் நேரலை (Live Video) காணொளியில், 360 பாகையில் அங்குள்ள காட்சிகளைக் காண முடியும்.
இது குறித்து டுவிட்டரின் வடிவமைப்புப் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான (Virtual Reality & Augmented reality head) அலெசாண்ட்ரோ சபாடெலி தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ள தகவலில், “இன்று முதல், நீங்கள் நேரலையில் வரலாம், 360 பாகை காணொளிகளைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நேரலைக் காணொளிகளுக்கு பெரிஸ்கோப் (Periscope) என்ற செயலி பயன்படுத்தப்படுகின்றது.