Home Featured கலையுலகம் ஜேனட் ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

ஜேனட் ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

794
0
SHARE
Ad

janet-and-husbandநியூயார்க் – மறைந்த உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தங்கையும், பிரபல பாடகியுமான ஜேனட் ஜாக்சன் தனது 50-வது வயதில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ஜேனட்டும் அவரது கணவர் விசாம் அல் மனாவும் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களது முதல் குழந்தையை வரவேற்றதாக பீப்பிள் மேகசின் தெரிவித்துள்ளது.

அக்குழந்தைக்கு எய்சா அல் மனா எனப் பெயரிட்டுள்ள ஜேனட் – விசாம் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த 2012-ம் ஆண்டு, கத்தார் தொழிலதிபர் அல் மனாவை ஜேனட் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.