Home Featured கலையுலகம் ‘வேலையில்லாப் பட்டதாரி’யுடன் மோதப் போகும் காஜல்!

‘வேலையில்லாப் பட்டதாரி’யுடன் மோதப் போகும் காஜல்!

732
0
SHARE
Ad

vip-2-dhanush-kajol

சென்னை – தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.

இதில் தனுஷூடன் மோதும் வில்லி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை காஜல் தேவ்கன் ஒப்புக் கொண்டுள்ளார். படையப்பா நீலாம்பரி போன்று பெரிதும் பேசப்படும் கதாபாத்திரமாக இது திகழும் என இப்போதே தமிழ்ப் படவுலகில் பேச்சுக்கள் வரத் தொடங்கி விட்டன.

#TamilSchoolmychoice

மின்சாரக் கனவு படம் மூலம் தமிழ் சினிமா இரசிகர்களைக் கொள்ளை கொண்ட காஜல் பின்னர் பிரபல இந்திப் பட நடிகர் அஜய் தேவ்கனை மணந்து இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகி, அண்மையில் ஷாருக்கானுடன் மீண்டும் சில படங்களில் இணைந்திருந்தார்.

தற்போது பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டு வேலையில்லாப் பட்டதாரி 2 படத்தில் நடிக்க மீண்டும் தமிழ் திரையுலகம் நோக்கி வருகின்றார் காஜல்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ரஜினியின் மகள் சௌந்தர்யா. கதை – வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார்.

vip-2-danush-poster

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப் படத்தின் முதல் தோற்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.