Home Featured கலையுலகம் பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்!

பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்!

1217
0
SHARE
Ad

om-puri-decd

மும்பை – இந்திப் படவுலகின் பிரபல குணசித்திர நடிகர் ஓம் புரி இன்று வெள்ளிக்கிழமை காலை மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.

இந்திப் படங்களைத் தாண்டி பல இந்தியப் படங்களிலும், ஆங்கிலப் படங்களிலும் கூட நடித்துப் புகழ் பெற்றவர் அவர்.

#TamilSchoolmychoice

அம்மைத் தழும்புகள் கொண்ட மிகச் சாதாரண முக அமைப்பைக் கொண்டிருந்தவர் என்றாலும், ஆழ்ந்த, கணீரென்ற, தெளிவான குரல் அமைப்பு, அத்தனை நவரசங்களையும் தேக்கி வைத்துக் காட்டும் முக அமைப்பு என ஏராளமான இரசிகர்களைக் கவர்ந்தவர்.

எண்ணிலடங்கா படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து தனது தனித்துவ நடிப்பை வழங்கியவர் ஓம் புரி.

அவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதற்கொண்டு பாலிவுட் படவுலகின் பிரபலங்களும் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.