Home Featured உலகம் புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் மரணம் – 8 பேர் காயம்

புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் மரணம் – 8 பேர் காயம்

746
0
SHARE
Ad

usa-fort-lauderdale-hollywood-airport-florida

போர்ட் லாடர்டேல் (அமெரிக்கா) – விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு பயணிகள் பயணப் பெட்டியாக விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் என்ற விமான நிலையத்தில் பயணி ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தாக்குதல் நடத்தியவன் பெயர் எஸ்டபன் சாண்டியகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ளது இந்த விமான நிலையம். விமானத்திலிருந்து பரிசோதிக்கப்பட்ட பயணப் பெட்டிகள் தானியங்கி படுகைகளில் (Baggage Belt) வெளியே வந்து கொண்டிருந்தபோது, அதிலிருந்து தனது பயணப் பெட்டியை வெளியே எடுத்த ஒரு பயணியான சாண்டியகோ, பெட்டியைத் திறந்து தனது துப்பாக்கியை வெளியே எடுத்திருக்கின்றான். அங்கிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக, மூர்க்கத்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல்காரன் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியவன் எனத் தெரிய வந்துள்ளது. ஆனால், இன்னும் சேவையில் இருக்கிறானா அல்லது ஓய்வு பெற்றவனா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.